Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் இன்னும் பலர் இணைவார்கள் – பேராசிரியர் கல்யாண சுந்தரம்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, அண்மையில் அதிமுகவில் இணைந்த பேராசிரியர் கல்யாண சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசும் போது, நாம் தமிழர் கட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுக் கொண்டிருந்த நான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சியில் இருந்து விலகி வேறு அமைப்புகளில் ஏதும் இணையாமல், சமூகப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு கொண்டிருந்தோன்.

நேற்றையதினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரடியாக அவருடைய இல்லத்தில் சந்தித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே என்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டேன். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் முன்னிலையில் இந்த இணைப்பு நடந்தது. அதேபோல தமிழகத்தினுடைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடைய இல்லத்திலும் அவரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றேன்.

நான் மட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சியில் இருந்த சில மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே எங்களை இணைத்துக்கொண்டு பணியை தொடங்க இருக்கின்றோம். மிக விரைவாக தமிழ்நாடு தேர்தலை சந்திக்கின்றன காலகட்டத்தில் ஒரு நல்லாட்சி தொடர வேண்டும் என்கின்ற நோக்கத்தில் இந்த முடிவை நாங்கள் எடுத்து இருக்கின்றோம்.

பல யோசனைகளை பிறகு, பல்வேறு கட்சிகள் மாற்றுக் கட்சிகள் குறித்தான சிந்தனைகளுக்கு பிறகு, எந்த விதமான சாதிய – மதவாத – அடிப்படை சிந்தனைகளுக்கு வழி கொடுக்காத அனைத்து மக்களும் இயங்குகின்ற ஒரு இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற ஒரு முடிவோடுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே இணைவது என்ற முடிவு செய்தோம்.

அதே போல ஏதோ ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு வாய்ப்பு கொடுத்து, பழையகால மகாராஜாக்களினுடைய ஆட்சி நடப்பது போல தனக்குப் பிறகு தன்னுடைய வாரிசு, அவருக்கு அதற்குப் பிறகு அவருடைய வாரிசு என்கிற நிலையில் உள்ள இயக்கங்கள் இல்லாமல் சாதாரண சாமானியன், ஊர் புறத்திலே இருந்து வருகின்ற சாமானியர்களுக்கும் உச்சத்தை தொட முடியும்,.

தகுதியானவர்களாக, திறமையானவர்களாக இருப்பார்கள் என்று சொன்னால் இந்த இயக்கத்தையும், மக்களையும் தலைமையேற்று நடத்துகின்ற இடத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்து விட முடியும் என்கின்ற வாய்ப்பை கொடுத்து இருக்கின்ற இயக்கமாக தமிழகத்தில் இருப்பது
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பேராசிரியர் கல்யாண சுந்தரம் தெரிவித்தார்.

Categories

Tech |