Categories
மாநில செய்திகள்

அதிமுகவிலிருந்து இபிஎஸ் நீக்கம்….. ஓபிஎஸ் அதிரடி….. மீண்டும் அதிமுகவில் சலசலப்பு….!!!!

ஓபிஎஸ்ஐ அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளதாக இபிஎஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் தற்போது இபிஎஸ்-ஐ இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “எடப்பாடி பழனிசாமி உட்பட அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள், மாநில – மாவட்ட நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்ட நிலையில், வைத்திலிங்கத்தை அந்த பொறுப்பில் நியமித்துள்ளதாகவும், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை துணை ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓபிஎஸ்-ன் இந்த கடிதத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஈபிஎஸ் தரப்பிலும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |