அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை வரவேற்பதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது.
இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்று பயணமாக நாளை மறுநாள் அகமதாபாத் வரும் அதிபர் ட்ரம்ப் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார்.
பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ள குஜராத் அரசு அகமதாபாத் நகரை வண்ணமயமாக மாற்றியுள்ளது. குறிப்பாக வந்திறங்கும் அகமதாபாத் விமான நிலையங்கள் முதல் சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானம் வரை உள்ள 22 கிலோ மீட்டர் தூரமும் மின்விளக்குகளால் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் நகரை குடிசைகள் இல்லாத நகராக காட்ட முயற்சிக்கும் குஜராத் அரசு, ட்ரம்ப் செல்லும் வழிகளில் குடிசைகளை மறைத்து பிரம்மாண்ட சுவர்களை எழுப்பி உள்ளது. அவர் திறந்து வைக்கும் மைதானத்திற்கு அருகே உள்ள குடிசைகளும் இடித்து அகற்றப்பட்டது. அந்த இடங்கள் அனைத்தும் குடிசைகள் இருந்த அடையாளமே தெரியாத அளவிற்கு வண்ணமயமாக மாற்றப்பட்டுள்ளது.