அமெரிக்க அதிபர் நாளை இந்தியா வர உள்ள நிலையில் அவருடைய காரின் சிறப்பம்சங்கள் மற்றும் அதில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இங்கு விரிவாக காண்போம்.
அமெரிக்க அதிபர் ஆனபிறகு முதல்முறையாக இந்தியாவிற்கு வருகிறார் ட்ரம்ப். அவரை வரவேற்பதற்காக ஒட்டுமொத்த இந்திய அரசாங்கமும் தயாராக இருக்கிறது.
இந்தியா என்னை எப்படி வரவேற்க போகிறது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த ஒரு நேரத்தில் தான் ட்ரம்ப் உடைய கார் ரொம்ப முக்கியமான பேசும் பொருளாக இருக்கிறது.
அமெரிக்க அதிபர் உலகத்திலேயே சக்திவாய்ந்த நபர்களில் ஒருவர் ஆவார். அவருடைய கார் எப்படி இருக்கும், அதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
காரின் சிறப்பம்சங்கள்:
அமெரிக்க அதிபர் உடைய காரை பீஸ்ட் என்றுதான் கூறுவார்கள். இந்த காரை அமெரிக்காவை சேர்ந்த ஹடியாளிக் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த கார் அமெரிக்காவில் இருக்கும் பொழுது அதன் முன்பக்கத்தில் அமெரிக்காவுடைய கொடி மட்டும் இருக்கும்.
அதுவே வேறு நாட்டிற்கு செல்லும்பொழுது காரின் ஒருபுறம் அமெரிக்கா கொடி மற்றும் அவர் செல்லும் அந்த நாட்டுடைய கொடி மற்றோருபுறம் இருக்கும். இப்பொழுது உதாரணத்திற்கு இந்திய வரும் பொழுது அமெரிக்க கொடி ஒரு பக்கம் இந்தியா கொடி ஒரு பக்கமும் இருக்கும்.
இந்த காரினுடைய பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன என்பதை பார்க்கும் பொழுது இந்த காரினுடைய பாடி மூன்று முக்கியமான உலோகங்களால் தயாரிக்கப்படுகிறது. அவை இரும்பு, டைட்டேனியம், செராமிக்ஸ் மூன்று வலிமையான உலோகங்களைப் பயன்படுத்தி இந்த காரினுடைய பாடிய தயாரிக்கிறாங்க.
அதற்கு அடுத்ததாக இந்த காரில் பார்க்க வேண்டிய முக்கியமான ஒன்று இந்த காரினுடைய முன் பக்கத்தில் இரண்டு முக்கியமான பொருட்கள் இருக்கிறது. ஒன்று கண்ணீர் புகை குண்டு வீசிய கருவி, அதற்கு அடுத்ததாக (நைட் விஷன்) அதாவது இருளில் இயக்கும் கேமரா, காரின் முன்பக்கம் இருக்கும்.
அதற்கு அடுத்து காருடைய அடிப்பக்கம் எகு பயன்படுத்தி அடிப்பாகத்தை கட்டி இருப்பார்கள். எகு பயன்படுத்தும்பொழுது கண்ணிவெடித் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ளும். கண்ணிவெடி தாக்குதல் நடந்தாலும் இந்த காருக்கு எதுவும் ஆகாது. அந்த அளவிற்கு ஒரு ஜேஸ் டிசைன் பண்ணி இருப்பாங்க.
அதற்கு அடுத்ததாக தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று முக்கியமான பகுதி காரோட டயர். காரோட டயர் பொருத்தவரைக்கும் கேவ்லர் இந்த காரின் உடைய டயர் பஞ்சர் ஆகாது, ஒருவேளை அது வெடித்தால் கூட கார் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மூவ் ஆகுறதுக்கு எந்த பிரச்சினையும் இல்லாம இருக்கும்.
அதற்கு அடுத்ததாக நாம் பார்க்க வேண்டிய பார்ட் இந்த காரோட கதவு 8 இன்ச் தடிமன் இருக்கும். இதோட ஸ்பெஷாலிட்டி என்னெவென்றால் ஏ44 மேக்னம் புல்லட் . இது காரின் கதவை எதுவும் செய்ய முடியாது. எ44 புல்லட் ஒரு வினாடிக்கு 1200 பீட் வேகத்தில் பயணிக்க கூடியது. ஒரு கரடியை கொல்வதற்கு இந்த ஒரு தோட்டா போதுமானது. அந்த தோட்டாவை இந்த எட்டு இன்ச் கதவு தடுத்து நிறுத்திவிடும்.
பீட்ஸ் காரின் பாதுகாப்பு ஏற்பாடுகள்:
இந்த நிலையில் காருக்குள் ட்ரம்ப் உடைய பாதுகாப்புக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது என்பதை பார்க்கலாம்..
முதலில் அந்த காரில் எத்தனை பேர் பயணம் செய்ய முடியும், ட்ரம்ப் இல்லாம இந்த காரில் ஐந்து பேர் பயணம் செய்யலாம். அதுபோக ட்ரம்ப்போட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக நிறைய நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறார்கள்.
முதல் விஷயம் கம்யூனிகேசன், ட்ரம்ப் அமரும் சீட்டில் ஒரு சாட்டிலைட் போன் இருக்கும். அந்த போனை வைத்து இரண்டு நபரை உடனடியாக தொடர்பு கொள்ள முடியும். ஒருவர் அமெரிக்காவின் vice-president இன்னொருவர் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அவர்களை இந்த தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.
அமெரிக்க அதிபருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அவர்கள் இரண்டு பேருக்கும் முதலில் தகவல் போய் சேர்ந்து விடும் என்ற நோக்கில் இந்த ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது. அதற்கு அடுத்து ட்ரம்ப் போட சீட்டுக்கு கீழே ஒரு பையர் சேஃப்டி பட்டன் இருக்கும்.
அந்த பட்டனை அழுத்தும் பொழுது ஆட்டோமேட்டிக்கா பயர் சேஃப்டி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கு அடுத்ததாக ட்ரம்பின் உடல்நிலையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை தடுப்பதற்கான ஏற்பாடுகளும் இந்த காருக்குள்ளேயே இருக்கும்.
காரின் பின் பக்கத்தில் இரண்டு முக்கியமான விஷயம் இருக்கும், ஒன்று ஆக்சிஜன் சிலிண்டர் மறறொன்று பிளட் பக் இவைகளை காரின் பின்பக்கத்தில் வைத்திருப்பார்கள். ஏன் என்றால் திடீரென்று ட்ரம்பின் உடல் நிலையில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் அதை அவர்களுக்கு பயன்படுத்துவார்கள்..