Categories
மாநில செய்திகள்

அதிதீவிர புயலாக மாறியது நிவர்… 16 கிமீ வேகத்தில் நகர்கிறது… அபாய எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நிவர் புயல் கரையை நோக்கி 16 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து மணிக்கு 16 கிமீ வேகத்தில் கரையை நோக்கி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்று இரவு புயல் அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும்.

அதனால் திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 75 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி புயல் கரையை கடந்த பிறகு ஆறு மணி நேரம் அதன் தாக்கம் அதிதீவிரமாக தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |