அதிதி சங்கரை காதலிப்பதாக கூறிய நடிகர் கூல் சுரேஷ் அவர் தங்கை மாதிரி என கூறி மன்னிப்பு கேட்டிருக்கின்றார்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான அதிதி, முத்தையா இயக்கத்தில் சென்ற 12ஆம் தேதி வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகி உள்ளார். இவரின் நடிப்பை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் நடிகரும் திரைப்பட விமர்சகருமான கூல் சுரேஷ் விருமன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பொழுது அவர் பேசியதாவது, சங்கர் சார் நீங்க படத்துல மட்டும் தான் காதலை வாழ வைப்பீங்க என்று எனக்கு தகவல் வந்துச்சு. ஆனா அப்படி இல்லை. என் காதலையும் வாழ வையுங்கள்.
நான் உங்கள் மகள் அதிதியை காதலிக்கிறேன். உங்கள் படத்தை போலவே உங்க மகளையும் பிரம்மாண்டமாக வளர்த்திருக்கிறீர்கள். அவரை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க. இல்லனா நான் கமிஷனர் ஆபீஸில் மனுக்கொடுப்பேன். அதுவும் இல்லன்னா முதல்வர் வீட்டு முன்னாடி உண்ணாவிரதம் இருப்பேன். எங்க வீட்டு மருமகனாக எனக்கு தகுதி இருக்கான்னு தெரியல. ஆனா உங்களை பார்க்கும் பொழுது நல்ல மனுஷனா தெரியுது. அதனால உங்க மருமகனா என்னை ஏதுப்பீங்கன்னு நினைக்கின்றேன். அதிதி ஐ லவ் யூ…. ஐ லவ் யூ என கையில் ஒரு சாட் பேப்பரை வைத்துக்கொண்டு பேசினார். இந்த நிலையில் தற்போது கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியுள்ளதாவது, அதிதி குறித்து தான் அப்படி பேசியது தவறுதான். தனது பேச்சை வாபஸ் வாங்குகின்றேன். அதிதி தனக்கு தங்கை மாதிரி எனக் கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், என்ன சார் அடி பலமா என கிண்டலடித்து வருகின்றார்கள்.