Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிக விலைக்கு விற்பனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. 200 பாட்டில்கள் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் முத்து மணி, தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் சந்தேகப்படும்படி இரண்டு பேர் நின்று கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்ததில் எம்ஜிஆர் காலனியை சேர்ந்த ஜெயக்குமார், சுரேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதும் விசாரணையில் வெளிவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து ஜெயக்குமார் மற்றும் சுரேஷ்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 200 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |