Categories
அரசியல்

அதிக வாக்குகள் பெற்ற எடப்பாடி.. எந்த மாவட்டத்தில் தெரியுமா..? வெளியான தகவல்..!!

தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அதிக வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 234 இடங்களில் திமுக, சுமார் 150க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருந்ததோடு, பல தொகுதிகளில் வெற்றியும் பெற்றுவிட்டது. இதே போல் சுமார் 80க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் இருப்பதுடன் ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

எனவே மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலைமைச்சரானார். இதனால் அவருக்கு பல்வேறு மாநில தலைவர்களின் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. எனினும் எடப்பாடி பழனிச்சாமி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆறாவது முறையாக களமிறங்கினார்.

அங்கு இவரை எதிர்த்து தி.மு.க சார்பாக சம்பத்குமார் என்பவர் முதன் முதலாக நிறுத்தப்பட்டார். அவர் புதிதாக களமிறங்கினாலும் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரான செல்வகணபதியால் பரிந்துரைக்கப்பட்டவர். எனவே அவர் பலமுடைய வேட்பாளர் தான் என்று கூறினர்.

இந்நிலையில் ஆரம்பத்திலிருந்து முன்னிலையில் இருந்த எடப்பாடி பழனிசாமி இறுதி எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் சம்பத் குமாரை காட்டிலும் சுமார் 90,255 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுவிட்டார்.

Categories

Tech |