கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கனடா Ontario மாகாணத்தில் கடந்த வாரம் புதிதாக 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏப்ரல் 3 ஆம் தேதியில் இருந்து 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய கடைகள் 50% பணியாளர்களுடன் திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதுவரை கனடாவில் 982,000-க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 23 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே 421 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.