Categories
மாநில செய்திகள்

அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் செய்ய…. இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… தமிழக அரசு அதிரடி….!!!

தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4 தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்து புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளுக்கான புகார் தெரிவிக்க 18004256151 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் சென்னை மாநகரப் பேருந்துகளில் 2,900 கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |