தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடம் கல்வி கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண நிர்ணயக் குழு முதுகலை, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான கல்விக் கட்டணங்களை நிர்ணயம் செய்துள்ளது. இதனைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் அது குறித்த புகார்களை இளநிலை மாணவர்கள் [email protected], முதுநிலை மாணவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம்.