Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிகாரிக்கு வந்த ரகசிய தகவல்… ரோந்துப் பணி… “600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்”…!!!!!

கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.

தேனி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து குமுளி வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள், காய்கறி ஏற்றி செல்லும் வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படை துணை தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள்.

அப்பொழுது ஐந்தாவது வார்டு முனியாண்டி கோயில் தெரு பகுதியில் சாலையோரமாக 11 மூட்டைகள் இருந்தது. அதை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தபொழுது, மூட்டைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து உத்தமபாளையம் நுகர்வோர் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தார்கள். இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |