தேர்தல் நடைபெறும் போது தி.மு.க கட்சி நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை மாவட்டத்தில் 200 தொகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் தி.மு.க வை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் தகராறு செய்த தி.மு.க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.