பாகிஸ்தானில் கார் டிரைவர் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய அடக்குமுறையில் சுமார் 11 பேர் காயமடைந்துள்ளார்கள்.
பாகிஸ்தானிலிருக்கும் பலுசிஸ்தான் மாநிலத்திலுள்ள சோதனைச் சாவடியில் கடந்த 15ஆம் தேதி அனுமதியின்றி கார் ஒன்று மிக வேகமாக சென்றுள்ளது. இதிலிருந்த டிரைவரை சட்ட அமலாக்க அதிகாரிகள் கொலை செய்துள்ளார்கள்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பெரும்பாலான லாரி காரர்கள் பலுசிஸ்தான் மாநிலத்தின் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 11 பேர் காயமடைந்துள்ளார்கள்.