இங்கிலாந்து அரசின் மன்னராக இளவரசர் சார்லஸ் பதவி ஏற்கும் போது அவருடைய மனைவி கமிலா தலையில் 2 ஆம் எலிசபெத் தாயாரின் பிளாட்டினம் மற்றும் இந்தியாவின் கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை வைத்து மகாராணியாக பொறுப்பேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் மகாராணியாக 2 ஆம் எலிசபெத் பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கான ஆண்டு விழா பிப்ரவரி 6 ஆம் தேதி கொண்டாடப்பட்டுள்ளது. அதேசமயம் இங்கிலாந்தின் அடுத்த மகாராணியார் யார் என்பது தொடர்பான முக்கிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடும் போது அவருடைய மனைவியான கமிலா 2 ஆம் எலிசபெத் தாயாரின் கிரீடத்தை தலையில் வைத்துக்கொண்டு அந்நாட்டின் மகாராணி பொறுப்பை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரீடம் 1937 ஆம் ஆண்டு பிளாட்டினம் மற்றும் இந்தியாவின் கோகினூர் வைரம் பதிக்கப்பட்டு 6 ஆம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக உருவாக்கப்பட்டுள்ளது.