கடன் சுமையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பிக்கட்டி சிவசக்தி நகரில் மணிகண்டன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாடகைக்கு வாகனங்களை இயக்கி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் மணிகண்டன் செலவுக்காக பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க இயலவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் விஷம் குடித்து குந்தா பாலம் அருகே மயங்கி கிடந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.