தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை நாகல்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான வேலுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலுச்சாமி பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வேலுசாமி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வேலுச்சாமியை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வேலுச்சாமி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.