சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 113 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 113 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் வீட்டு தன்மைகளில் 126 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் 126 பேர் ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.