சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதைய டுத்து அங்கு மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரானா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சீன அரசு பல்வேறு கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் கன்ன பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஷாங்காய் நகரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஷாங்காயில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதி மற்றும் உணவு விடுதி ஆகியவை மறு உத்தரவு வரும்வரை மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பள்ளிகளையும் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து தலைநகர் பீஜிங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த மூன்று வாரங்களில் அதிகபட்சமாக பீஜிங்கில் நேற்று ஒரு நாளில்