Categories
தேசிய செய்திகள்

அதிகரித்துக் கொண்டே செல்லும் விலைவாசி…. திடீரென உயர்ந்த EMI…. அதிர்ச்சியில் மக்கள்….!!!

நாட்டில் தற்போது அனைத்து மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை விலைவாசி உயர்வுதான். அதாவது பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கும் என  அறிவிப்பு வெளியிட்டதால் மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். அதாவது ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்தின் போது ரெப்போ வட்டி உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகை ஆகும். இந்நிலையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி விட்டால் வீட்டுக்கடன், கார்கடன் போன்ற பலவற்றிற்கான EMI உயரும். சில நாட்களுக்கு முன்பாக ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ரெப்போ வட்டி 0.4 சதவீதம் உயர்த்தப்பட்டு 4.40 சதவீதமாக இருக்கும். மேலும் பணவீக்க பிரச்சனையை  மற்ற காரணிகள் மூலமாக சமாளிக்க முயற்சித்தது. இதற்காக ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் பரிந்துரைத்த போது அதற்கு  மத்திய அரசு மறுத்துள்ளது. இதன் காரணமாகத்தான் ரிசர்வ் வங்கி வேறு வழியின்றி பணவீக்கத்தை சமாளிப்பதற்காக ரெப்போ வட்டியை உயர்த்தியுள்ளது.

Categories

Tech |