Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் மரணங்கள்…. கோல்ப் விளையாட ஓடும் ட்ரம்ப்…. அதிகாரமின்றி தவிக்கும் பைடன்….!!

கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் ட்ரம்ப் எதையும் கண்டுகொள்ளாததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்ததில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்துள்ளார். இதன்பின்னர் கொரோனாவினால் 11 ஆயிரம் மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இவ்வாறு கொரோனா மரண எண்ணிக்கை அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், ட்ரம்ப் எதையும் கண்டுகொள்ளாமல் தனக்கு பிடித்தமான கோல்ப் மைதானத்திற்கு சென்று நேரத்தை செலவிட்டு வருகிறார். தேர்தலில் முறைகேடு நடந்து விட்டது என்று இரண்டு முறை ஊடகங்களை சந்தித்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார்.

மேலும் பலமுறை தனது ட்விட்டர் பக்கத்திலும் தேர்தல் மோசடி என்று பதிவிட்டு வந்துள்ளார். ஆனால் இதுவரை 1/4 மில்லியன் மக்கள் இரத்த நிலையிலும் ட்ரம் எந்த அதிகாரபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள பைடனுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்கவும் மறுத்து வருகிறார்.

மேலும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்த நாளில் மட்டும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 100,000 ஆகும். ஆனாலும்  கொரோனா ட்ரம்ப் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை உடையவர் என்று வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் தற்போது புதிய ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பைடன் தொடர்ந்து ஊடகங்களை சந்தித்து கொரோனா தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கிறார்.

இதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய நிபுணர் குழு ஒன்றையும் நிறுவியுள்ளார். இந்நிலையில் ஜோ பைடன் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த மெத்தனமான செயலால் அமெரிக்க மக்கள் பேரிழப்பை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |