பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் துணைத் தலைவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதால் தைவானை சுற்றி சீனா ராணுவ போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக தைவானின் பல விமான சேவைகளின் வழித்தடங்கள் மாற்றப் போட்டதோடு, 50-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு தைவான் மீது சைபர் கிரைம் தாக்குதலும் நடைபெறுவதால் அடிக்கடி இணையதள சேவைகளும் முடங்கி விடுகிறது.
இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் துணைத் தலைவர் Ou yang Li hsing பிங்க்டங் நகருக்கு தொழில் முறை பயணம் மேற்கொண்டு இருந்தார். இவர் ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருக்கும் போது திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவர் ஏவுகணை தயாரிக்கும் திட்டங்களை மேற்பார்வையிடும் பணிகளை செய்து வந்ததோடு, சீனா போர் தொடுத்தால் ஏவுகணை உற்பத்தியை 500-ஆக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்த சூழலில் Ou yang Li hsing மர்மமான முறையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.