கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர்.
சீனாவில் பரவிய வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸை கட்டுப் படுத்துவதற்காக தற்போது உலகமெங்கிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாகவே தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 1,494 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 1137 பேருக்கு அறிகுறி இல்லாத தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் ஆல் நேற்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை. இதுவரை தொற்றினால் 5226 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது வரை தொற்றினால் 2,41,955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.