ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் பேசியபோது “வருகிற காலங்களில் ரயில் கட்டணத்தை அதிகரிக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த அறிக்கையை அடுத்து, வருகிற காலங்களில் ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று கொரோனா காலத்திற்கு முன் இருந்த மூத்தகுடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகையை, மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து ரயில்வே அமைச்சரிடம் மக்களவையில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர், இப்போது ரயில் வாயிலாக பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணிக்கும் 55% சலுகை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.