Categories
தேசிய செய்திகள்

“அதிகம் பேர் பாஸ்போர்ட் பெற்றவர்கள்”…. தமிழகத்திற்கு எந்த இடம்?…. வெளியான தகவல்….!!!!

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு நாம் போக பாஸ்போர்ட் பெறவேண்டியது அவசியம் ஆகும். பாஸ்போர்ட் இன்றி நாம் இந்தியாவின் அண்டைநாடுகளுக்கு கூட போக முடியாது. இந்தியாவில் 3 வகையான பாஸ்போர்ட் இருக்கிறது. அதாவது சாதாரண-வழக்கமான பாஸ்போர்ட், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் மற்றும் அஃபீஷியல் பாஸ்போர்ட் என 3 வகை இருக்கிறது. ஹென்லி மற்றும் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா 87வது இடத்தைப் பிடித்து இருக்கிறது.

இதில் அதிகம்பேர் பாஸ்போர்ட் பெற்ற மாநிலங்களில் தமிழகம் 3வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் சென்ற ஜூன்மாதம் 30ஆம் தேதிவரை 7,95,19,121 பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். இவற்றில் அதிகபட்சமாக கேரளாவில் 91,43,099 பேரும், மராட்டியத்தில் 89,32,053 பேரும், தமிழகத்தில் 79,27,869 பேரும் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். ஆனால் மிசோரம், நாகலாந்து, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் குறைவான நபர்கள் தான் பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.

Categories

Tech |