ஜப்பானில் எந்தவித முதலீடும் இல்லாமல் ஒரு நாளைக்கு 7000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்திற்கு இளைஞர் ஒருவர் தன்னைத்தானே வாடகைக்கு விட்டுள்ளார். டோக்கியோவை சேர்ந்த ஷோஜி மோரி மோட்டோ என்ற இளைஞர் தனியார் நிறுவனங்களில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக புதிய தொழில் ஒன்றை தொடங்க வேண்டும் என்று சிந்தித்து கொண்டு இருந்தார். அப்போது தன்னைத்தானே வாடகைக்கு விடலாம் என்று சிந்தித்து தற்போது அந்த தொழிலை செய்து வருகிறார்.
கடைக்கு செல்வதற்கு விளையாடுவதற்கு எளிதான வேலை ஆட்களுக்கு ஆட்கள் தேவை என்றால் தன்னை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று ட்விட்டரில் பதிவிட்டு அவர் கடினமான வேலைகளை செய்ய மாட்டேன் என்றும் பாலியல் ரீதியாகவோ தன்னை அழைத்தால் அவர்களை நிராகரித்து விடுவதாகவும் வாடிக்கையாளர்களின் மணக்குறைகளை கேட்டு பொழுதை கழிப்பதற்காக மட்டுமே செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . இதனைத் தொடர்ந்து அவரை பலரும் வாடகைக்கு முன்பதிவு செய்து வருகிறார்கள்.