Categories
அரசியல்

அண்ணே! கவலைப்படாதீங்க…. இது எனக்கு கௌரவ பிரச்சனை…. தேவர் ஜெயந்தி விழாவில் மரியாதை….. தி. சீனிவாசன் உறுதி….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமை பதவிக்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவோடு இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குவதாக அறிவித்தார். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனவும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது செல்லாது எனவும்  தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு, எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் கூறியுள்ளார். அதோடு எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என நீதிபதி கூறியது அவர் நியமித்த அனைத்து உறுப்பினர்களும் செல்லும் என்பதை மறைமுகமாக உணர்த்தும் விதத்தில் இருப்பதாக இருக்கிறது.

இந்நிலையில் வருகிற அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி விழா வருவதால் அதிமுக கட்சியின் பொருளாளர் பதவியில் இருப்பவர் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவித்து மரியாதை செலுத்துவார். இந்த கௌரவம் ஒவ்வொரு வருடமும் அதிமுக கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு கிடைத்தது. ஆனால் தற்போது ஓ பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதால் தேவர் ஜெயந்தி விழாவில் யார் தங்க கவசம் அணிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு பலத்துள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மேல்முறையீடு செய்ய இருக்கின்றனர்.

அதோடு எப்படியாவது அக்டோபர் 30-ஆம் தேதிக்குள் தங்களுக்கு சாதகமான தீர்ப்பை வாங்கிவிட வேண்டும் என்பதில் ஓபிஎஸ் தீவிரம் காட்டி வருகிறார்.  இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி திண்டுக்கல் சீனிவாசனிடம் கூறி வருத்தப்பட்டுள்ளாராம். அப்போது திண்டுக்கல் சீனிவாசன் எடப்பாடி பழனிச்சாமிடம், நீங்க எத பத்தியும் கவலைப் படாதீங்க, 4 நாள்‌தான் அதுக்குள்ள சோலிய‌ முடிச்சு புடலாம். டெல்லி வழக்கறிஞர்கள் நமக்கு சாதகமாக தான் தீர்ப்பு வரும் என்று நம்பிக்கை தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் திண்டுக்கல் சீனிவாசன் என்னுடைய கௌரவ பிரச்சனை இது அதனால ஒரு கை பார்த்திடலாம். நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நீங்க ஆசைப்பட்டது கண்டிப்பாக நடக்கும் என்று இபிஎஸ்ஸுக்கு தைரியம் கூறி இருப்பதாக தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது.

Categories

Tech |