தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கூகனூர் கிராமத்தில் விவசாயியான பாலையா(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்பிரமணியன்(59) என்ற அண்ணன் உள்ளார். சுப்பிரமணியனுக்கு குமார், விக்னேஸ்வரன்(31) என்ற இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் குமாருக்கு தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து குமார் வேலை பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்று விட்டார். அந்த சமயம் விக்னேஸ்வரனுக்கும், அண்ணியான தேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட அது கள்ளக்காதலாக மாறியது.
மேலும் விக்னேஸ்வரன் தேவியை திருப்பூருக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தியுள்ளார். இதனை அறிந்த குமார் பாலையா மூலம் விக்னேஸ்வரன், தேவியை ஆகிய இருவரையும் கண்டித்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு சுப்பிரமணியனின் வீட்டில் விக்னேஸ்வரன், தேவி உட்பட உறவினர்கள் இருந்தபோது பாலையாவும், அவரது மகன் சக்திவேலும் விக்னேஸ்வரனை கண்டித்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த சுப்பிரமணியன், விக்னேஸ்வரன், உறவினர் வீரமணி ஆகியோர் இணைந்து பாலையாவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விக்னேஸ்வரன், சுப்பிரமணியன், வீரமணி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் விக்னேஸ்வரன், சுப்பிரமணியன், வீரமணி ஆகிய 3 பேருக்கும் தலா 2 லட்ச ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.