பேரறிஞர் அன்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இன்று பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழகத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் சமூக நீதி, மாநில சுயாட்சி உள்ளிட்ட கொள்கைகளை உரக்க முழங்கியவர். மதராஸ் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றினார். பேருந்துகள் நாட்டுடைமை ஆக்கினார். சுயமரியாதை திருமண சட்டத்தை கொண்டு வந்தார் என்று இவரின் முன்னெடுப்புகள் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது. இவரின் பிறந்த நாளான இன்று இவர் செய்த அனைத்து செயலையும் நாம் நினைவு கூறுவோம்.