Categories
அரசியல்

“அண்ணாமலை போட்ட பலே ஸ்கெட்ச்” திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் பாஜக….. சிக்கலில் முதல்வர்….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு சமீபத்தில் பாஜக கட்சியினர் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பல பாஜக நிர்வாகிகளுக்கும், காவல் துறையினருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது. இந்த போராட்டத்திற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய சுவாரசியம் இருக்கிறது. அதாவது மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பாஜக மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறுகின்றனர். இதன் காரணமாக தொண்டர்களை உற்சாகப்படுத்து வதற்காக போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த போராட்டம் பாஜக மேலிட உத்தரவின்  பேரில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதோடு மேற்குவங்க மாநிலத்தை போன்று மற்ற மாநிலங்களிலும் பாஜகவினர் ஆளுங்கட்சியினர் ஊழல்களை வெளிப்படுத்தி போராட்டம் நடத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜே.பி நட்டா ஆகியோர் மாநில பாஜக தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் குறிப்பாக தமிழகத்தில் திமுக அமைச்சர்களின் ஊழல்களை அம்பலப்படுத்தி பாஜக போராட்டம் நடத்த வேண்டும் மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அண்ணாமலை மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் பாஜக சார்பில் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தின் போது கூடுதல் ஊழல் பட்டியல் அனுப்பி வைக்கப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போராட்டம் வருகிற 2024-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்றும், தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கும் என்றும் பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |