Categories
அரசியல் மாநில செய்திகள்

“அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி”…. கடுமையாக விமர்சித்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

பாஜக தலைவர் ஒரு அரசியல் கோமாளி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கட்சி தலைமைக்கு தெரியாமல் கோவையில் மாவட்ட நிர்வாகிகள் பந்த் அறிவிக்க முடியுமா?கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பேசி பந்தை ரத்து செய்ய வேண்டும் என சொல்லி இருக்க வேண்டும். ஒரு இயக்கத்தை வளர்ப்பதற்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஆனால் ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது என்பது மக்கள் ஏற்காத ஒரு நடைமுறை.

நீதிமன்றத்தில் தனக்கும் பந்திற்கும் சம்பந்தமில்லை எனக் கூறுகிறார் பாஜக தலைவர். முதலில் பாஜகவினர் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்.அதற்கு முன்பு அரசியல் கோமாளிகள் தொடர்பான கேள்விகளை தன்னிடம் கேட்காதீங்க என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |