திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மகாதீபம் மிக பிரசித்தியாக கொண்டாடப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலை மீது மகாதீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது.
2668 அடி உயரமுள்ள அண்ணாமலையில் 200 கிலோ எடையும் 5 அடி உயரமும் கொண்ட கொப்பரையில் 3,500 கிலோ நெய் ஊற்றப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. மலையை சுற்றிலும் திரண்டிருந்த உள்ளூர் பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’என விண்ணதிர முழக்கமிட தீபம் பிரகாசிக்கிறது.