அண்ணாமலைக்கு கிடைத்திருக்கும் புதிய அதிகாரங்களை பார்த்து பாஜக மூத்த நிர்வாகிகள் செய்யப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பகுதியில் 2000 ஏக்கருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகின. அங்கு பார்வையிடுவதற்காக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரங்கிப்பேட்டை அருகே பெரியபட்டு மெயின் ரோடு வழியாக சென்றார். அப்போது அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து கிராமத்திற்கு டிராக்டரில் ஏறி அதை ஓட்டிச் சென்று மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பயிர்களை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது: என்எல்சி நிதி மூலம் பரவனாற்றை தூர் வாரவும், அகலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும். விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். காரில் இருந்தபடியே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டால் உண்மை நிலவரம் தெரியாது. கீழே இறங்கியும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அதன்பிறகு பகுதிகளுக்கு நேரடியாக சென்று விவசாயிகளிடம் கலந்துரையாடிய அவர் கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார், அண்ணாமலை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் அவர் முதலமைச்சராக இருக்க வேண்டும், இல்லை என்றால் அமைச்சராகவோ அல்லது எம்எல்ஏவாக இருக்க வேண்டும். இதில் எதிலும் சேர்க்க முடியாத சூழலில் எப்படி இத்தனை வாக்குறுதிகளை அவர் அளிக்கின்றார் என்பதே தெரியவில்லை. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது அப்படி என்ன அதிகாரம் அண்ணாமலைக்கு புதிதாக வந்துவிட்டது? என்று கேள்வி எழுப்பி பாஜக நிர்வாகிகளே ஆச்சரியமாக பார்க்கின்றனர்.