அண்ணாத்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் அண்ணாத்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் எப்போதுமே இசை வெளியீட்டு விழாவின் மூலம் தான் பாடல்களை வெளியிடும். ஆனால் தற்போது அண்ணாத்த படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு பிரம்மாண்டமாக ஆடியோ லான்ச் நடைபெறும். அதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது கொரோனா காரணமாக அதிக ரசிகர்களை அனுமதிக்க முடியாது. பிரமாண்டமாக நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் குறைவான ரசிகர்கள் இருந்தால் சரியாக இருக்காது என்பதால், அண்ணாத்த படக்குழுவினர் தங்களது படத்தின் பாடல்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.