திடீரென மயங்கி விழுந்து ஊராட்சிமன்ற துணை தலைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ள இருக்கூர் வடக்கு செல்லப்பம்பாளையத்தில் வேலுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுநல்லிகோவில் ஊராட்சிமன்ற துணைத்தலைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி ஜோதிமணி அதே ஊராட்சியில் தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேலுசாமி தனது தாயாரை பார்ப்பதற்காக பெரிச்சா கவுண்டம்பாளையத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர்.
அப்போது வேலுச்சாமிக்கும் அவரது அண்ணன் நாகராஜ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அண்ணன் தம்பி இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் வேலுசாமி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி ஜோதிமணி உடனடியாக வேலுசாமியை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வேலுச்சாமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து ஜோதிமணி ஜோடர்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சேர காவல்துறையினர் வேலுசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.