நிலத்தகராறு காரணமாக 2 பேர் கொலை மற்றும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பைரவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரின் அண்ணன் செல்வம். இவர்களுக்கு இடையே நில தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று மதியம் சுப்பிரமணியன் அவரது அண்ணன் செல்வத்தின் மனைவி சங்கீதாவிடம் தகராறில் ஈடுபட்டு சங்கீதாவை தாக்கிய பொழுது வெங்கடேசன் என்பவரின் மனைவி வேண்டாமிர்தம் தடுக்க வந்திருக்கின்றார்.
இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன் வேண்டாமிருதத்தை கத்தியால் வெட்டியதால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் காயமடைந்த சங்கீதா அவரின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது அவரின் கணவர் மற்றும் வேண்டாமிருதத்தின் கனவர் எதிரே வந்ததையடுத்து அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து கூறிய போது அங்கு வந்த சுப்பிரமணியன் ஆத்திரம் அடைந்து அண்ணன் செல்வத்தையும் வெங்கடேசனையும் ஊராட்சி மன்ற துணைத் தலைவரையும் சரமாரியாக கத்தியால் சரமாரியாக வெட்டி இருக்கின்றார்.
பின் தனது பெரியப்பா மகன் காந்தி என்பவரின் கடைக்கு சென்று தனது அண்ணனுடன் ஏற்பட்ட நிலப் பிரச்சினைக்கு நீ தான் காரணம் என அவரையும் அவரது மனைவியையும் கத்தியால் வெட்டியிருக்கின்றார். அப்பொழுது காந்தி கடையில் இருந்த இரும்புறாடை எடுத்து சுப்ரமணியனை தாக்கியிருக்கின்றார். இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் ஆறு பேர் பலத்த காயமடைந்த நிலையில் அவர்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். இந்நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.