அணு உலையின் கழிவுகளை கடலில் வெளியேற்றும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் சுனாமி பேரலை ஏற்பட்டது.அந்த பேரலையால் ஜப்பானில் புகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குமுன் 1986-ஆம் ஆண்டு சுரப்பியில் உள்ள அணு உலையில் ஏற்பட்ட விபத்தை விட புகுஷிமா அணு உலை விபத்து மிகப்பெரிய விபத்தாக பதிவாகியுள்ளது. இதனால் புகுஷிமா கடற்பரப்பில் கதிர்வீச்சு கலந்ததால் அங்கு மீன்பிடிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புகுஷிமா கடற்பரப்பில் மீண்டும் மீன்பிடிக்க உள்ளூர் மீன்பிடி சங்கம் முடிவு எடுத்திருந்தது.
இருப்பினும் அதற்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில் வெறும் 18 சதவீதம் மட்டுமே மீன் பிடிக்கப்படுகிறது. தற்போது புகுஷிமா கடற்பரப்பில் பிடிக்கப்பட்ட மீனில் ‘சீசியம்’ என்ற கதிரியக்க வேதிப்பொருள் உயர் அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கதிரியக்க வேதிப்பொருள் புகுஷிமா கடல் உணவுகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஜப்பானின் அணு அவசர உதவி இயக்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி பிளாக் ராக்ஃபிஷ் ரக மீனில் ஒரு கிலோவுக்கு 1400 கதிரியக்க அளவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது அந்த நாட்டின் உணவு தர வரையறையில் குறிப்பிட்டுள்ளதை விட 14 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் புகுஷிமா கடற்பரப்பில் பிடிக்கப்பட்ட இந்த வகை மீனுக்கு ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது. தற்போது புகுஷிமா அணு உலையில் கழிவுகளை கடலில் வெளியேற்றும் ஜப்பானின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் அணு உலையின் கழிவுகளை கடலில் வெளியேற்றினால் புகுஷிமா கடல் உணவு விற்பனையை நம்பி இருப்பவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.