விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் ராமர் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய்டிவியில் இவருடைய நிகழ்ச்சியை பார்த்து விட்டாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் சிரிக்க தொடங்கி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய மிமிக்கிரி மற்றும் பாடலுக்கு பலரும் அடிமை. இந்த நிலையில் ராமர் அரசு அலுவலகர் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சு. வெங்கடேசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின்போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் ராமர் அவர்களை சந்தித்தேன் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.