நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் எடுத்த புகைப்படம் குறித்து ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் கடைசியாக நடித்த படம் “பூமி”. இது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கின்ற “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது ஜெயம் ரவி “ரவி 30” திரைப்படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். இது ரசிகர்களிடையே பெரிதும் பரவியது. தற்பொழுது அவரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது .அந்த புகைப்படத்தில் அவர் வெள்ளை தாடியுடன் ஆளே மாறி இருக்கிறார்.