Categories
சினிமா தமிழ் சினிமா

அட செம… சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஹீரோயின் இவரா?… யாருன்னு பாருங்க…!!!

சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், காளி வெங்கட், முனீஸ்காந்த், ஆர்.ஜே.விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Rashmika Mandanna to pair up with Sivakarthikeyan? | Tamil Movie News -  Times of India

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை அனுதீப்.கே.வி இயக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |