Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட செம… அட்லீ- ஷாருக்கான் படத்தில் நடிகர் விஜய்யா?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழ் திரையுலகில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் அட்லீ. தற்போது இவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் பிரியாமணி, ராணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

SRK, Thalapathy Vijay in Kollywood director Atlee's next?

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூனேவில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |