ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் என சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தென்கிழக்கு கோஸ்ட் மற்றும் கிழக்கு குணால் என்ற மாகாணங்கள் அமைந்துள்ளது. இந்த மாகாணங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ படைகள் நேற்று இரவு வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் என சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியான பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுதாகவும் பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோஸ்ட் பகுதியில் உள்ள வசிரிஸ்தானிலிருந்து மக்கள் குடியேறிய முகாமைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவப் படைகள் விமான தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.