Categories
உலக செய்திகள்

அட கடவுளே…. பென்குயின்களுக்கு வந்த சோதனையா….? எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் ….!!

பென்குயின் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தென் ஆப்பிரிக்கா நாட்டில் பென்குயின் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  இதனை அடுத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பென் குயின்கள் இருந்த நிலையில் இப்பொழுது 10 ஆயிரம் ஜோடிகள் மட்டுமே உள்ளன.  இதனை தொடர்ந்து இங்குள்ள மீனவர்கள் அதிக அளவில் மத்தி மற்றும் நெத்திலி மீன்களை பிடிப்பதால் பென் குயின்களுக்கு கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது.

மேலும் எண்ணெய் கசிவு மற்றும் பருவநிலை மாற்றத்தால் பென்குயின்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து அவற்றின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகின்றது.  இதனை அடுத்து பென்குயின்கள் பாதுகாப்பற்ற இடங்களில் இடும் முட்டைகளை தன்னார்வலர்கள் மீட்டு குஞ்சுகள் பொரிக்கும் வரை பாதுகாத்து வருகின்றனர்.

Categories

Tech |