பிரபல நடிகை திரிஷா நடிகர் விஜய் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படத்தில் நடிகை திரிஷா விஜயுடன் சேர்ந்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கும், திரிஷாவுக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும். இந்நிலையில் நடிகை திரிஷா கில்லி படம் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது கில்லி படத்தில் நடிகை திரிஷாவுக்கும், விஜய்க்கும் இடையே கெமிஸ்ட்ரி வரவே இல்லையாம். இதனால் படக்குழு திரிஷாவுக்கும், விஜய்க்கும் இடையே கெமிஸ்ட்ரியை வரவழைக்க மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார். அதன் பிறகு நடிகை திரிஷாவும், நயன்தாராவும் நல்ல தோழிகளாக இருந்துள்ளனர்.
ஆனால் பொதுவான சில நண்பர்களால் த்ரிஷாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே சில பிரச்சினைகளை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நயன்தாராவும் நானும் எங்களுடைய பிரச்சினைகளை மறந்து பேசி விட்டதாகவும், நான் நயன்தாராவுக்கு நல்லது நடக்க வேண்டும் என நினைக்கிறேன். அவரும் எனக்கு நல்லது நடக்க வேண்டும் என விரும்புகிறார் எனவும் த்ரிஷா கூறியுள்ளார்.
மேலும் த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த படம் கைகொடுக்கும் என திரிஷா மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறார்.