Categories
டெக்னாலஜி பல்சுவை

அட இத்தன நாள் இது தெரியாம போச்சே… இனிமே இப்படி சேவ் பண்ணுங்க… எப்போ வேணாலும் எடுத்துக்கலாம்…!!!

மொபைலில் ஒருவரின் தொடர்பு எண்ணை சேமிக்கும்போது இனிமே இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசும் உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே உரையாடிக் கொள்கிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எண்களை மொபைலில் சேமித்து வைப்பது வழக்கம்.

மொபைலில் ஒருவரின் தொடர்பு எண்ணை சேமிக்கும் போது பெரும்பாலும் நாம் செய்வது ஒன்று சிம்மில் சேமிப்பது, மற்றொன்று மொபைலில் சேமிப்பது. இந்த இரண்டுமே தவறான செயல் முறை. ஒருவேளை நமது மொபைலுக்கோ, சிம்முக்கோ பாதிப்பு ஏற்பட்டால் இந்த எண்களை திரும்பப் பெறுவது கடினம். இதற்கு மாற்றாக நம்முடைய ஜிமெயிலில் தொடர்பு எண்ணை சேமித்து வைத்தால் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

Categories

Tech |