ஒருவர் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது தனக்கு கூகுள் செய்ய தெரியும் என தனது திறமையை வெளியிட்டுள்ள சம்பவம் வைரல் ஆகியுள்ளது.
ஒருவருக்கு வேலை வேண்டும் என்றால் அவர் வேலையை பெற விரும்பும் நிறுவனத்திற்கு தங்களது விண்ணப்பத்தினை மெயில் அனுப்புவார்கள். அப்படி ஒரு நிறுவனத்திற்கு அதிகமான விண்ணப்பங்கள் மெயில் வரும். மெயில்களை பார்த்து தகுதியான நபர்களை அந்நிறுவனம் வேலைக்கு எடுக்கும் முயற்சியில் ஈடுபடும். பெரும் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு துறை இந்த பணிகளை செய்கிறது. அப்படி ஒருவர் ஒரு நிறுவனத்திற்கு தனது விண்ணப்பத்தினை நிரப்பி மெயில் அனுப்பியுள்ளார்.
அதில் தனது திறமைகளாக கூகுள் செய்வதை குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றும் பெண் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நபரை வேலைக்கு எடுக்க தேர்வுக்கு அழைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சமூக ஊடங்களில் வைரலாகி வருகின்றது. இதையடுத்து பலரும் தங்களது விண்ணப்பத்தில் அவர்களுக்கு என்ன தெரியுமோ அதை மட்டும் நிரப்பி அனுப்பி வருகின்றன.