சர்வதேச அளவில் FIFA கால்பந்து உலகக்கோப்பை பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருகின்றனர். இந்நிலையில் போலந்து நாட்டைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், தன் அறுவை சிகிச்சையின்போது FIFA கால்பந்து போட்டியை பார்க்க வேண்டும் என மருத்துவரிடம் கேட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து அந்த கால்பந்து ரசிகரின் ஆசையை நிறைவேற்ற மருத்துவர்கள் அதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி அறுவை சிகிச்சை நடைபெறும் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டே அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்த புகைப்படத்தை ஆனந்த் மஹிந்திரா தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.