ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்பொழுது ஹாலிவுட் இருந்து பாலிவுட் சென்றிருக்கின்றார். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படம் மூலம் நயன்தாராவும் பாலிவுட்டில் அறிமுகமாகின்றார்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் அட்லி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். விஜய் சேதுபதியிடம் கை நிறைய திரைப்படங்கள் இருப்பதால் எப்படி டேட்ஸ் ஒதுக்குவார் என கூறப்பட்ட நிலையில் தற்பொழுது டேட்ஸ் ஒதுக்கி உள்ளார். ஷாருக்கானக்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளாராம்.
இதனிடையே அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என வெளியான தகவலில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஜவான் படம் குறித்து ஷாருக்கான் கூறியுள்ளதாவது, ஒரு வித்தியாசமான திரைப்படம். அட்லியின் இயக்கம் எனக்கு பிடித்திருக்கின்றது. இந்த சோனரில் நான் இதுவரை நடித்தது இல்லை. அதனால் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். எனக்கும் அட்லீக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.