Categories
கிரிக்கெட் விளையாட்டு

அட்ராசக்க…. “தோனி, கோலி” கூட இல்ல…. “ரோகித் சர்மாவின்” புதிய வரலாற்று சாதனை…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

இந்திய கிரிக்கெட் வீரரான ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் பங்கேற்றவர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24-ஆம் தேதியில் இருந்து நடைபெற்றுள்ளது. இந்த 3 போட்டிகளிலுமே இந்தியா, இலங்கை அணியை தோற்கடித்து வெற்றிவாகையை சூடியுள்ளது. இவ்வாறிருக்க கடந்த நவம்பர் மாதத்திலிருந்து டி20 அணியின் கேப்டனாக பதவியேற்ற ரோகித் ஷர்மா தற்போது வரை ஒரு போட்டிகளில் கூட தோல்வி பெறவில்லை. அதன்படி நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணி என அனைத்தையும் இந்தியா ஒயிட் வாஷ் செய்துள்ளது.

இந்நிலையில் ரோகித் சர்மா புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் பங்கேற்றவர் என்ற சாதனை படைத்த பாகிஸ்தானின் மூத்த வீரர் ஷோயிப் மாலிக்கின்(124) வரலாற்றை ரோகித் முறியடித்துள்ளார். இவ்வாறு இருக்க தோனி, கோலியை விட ரோகித் சர்மா மட்டும்தான் 100 டி20 போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |