Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க! சுகாதார பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்…. யோகி ஆதித்யநாத் அறிவிப்பு….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சுமார் 80,000 சுகாதார பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்க உள்ளதாக மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் இந்த ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படுவதாக கூறியுள்ள யோகி ஆதித்யநாத், இதன்மூலம் ஆஷா பணியாளர்கள் தங்கள் ஆவணங்களை எளிதாக மாநில அரசின் இணையதளத்தில் பதிவேற்ற முடியும் என கூறியுள்ளார்.

மேலும் இது பற்றி அவர் தனது ட்விட்டர் தளத்தில், அனைத்து சகோதரிகளுக்கும் இதய பூர்வ வாழ்த்துக்கள். இனிமேல் நீங்கள் தேவையற்ற உழைப்புக்காக சக்தியை செலவிட வேண்டியதில்லை. நீங்கள் எளிதாக படிக்கவும், எளிதாக எழுதவும் முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |